Friday, April 3, 2009

டிஜிட்டல் யுத்தமும் சிறுபான்மை சமூகங்களது மையத்துக்கான விளையாட்டும்

- பர்ஸான் ஏஆர் : எம். அப்துல் றஸாக்

இன்று மிக அதிகமாக உபயோகிக்கப்படும் சொற்பிரயோ கங்களில் எண்மையம் எனப்படும் டிஜிட்டல் - Digital - மிக பெரும்பாலான இடத்தினை விரும்பியோ விரும்பாமலோ நிரப்பி அதிகாரம் செலுத்திக் கொண்டிருக்கிறது. வெறும் தகவல் தொழில் நுட்பத்தின் பின்புலப்பதமாக உருப்பெற்ற டிஜிட்டல் என்ற சொல்லானது காலப்போக்கிலும் அது அடைந்து கொண்ட உலகளாவிய ஆக்கிரமிப்பு வெற்றியின் பின்னர்; அதிகாரத்தினைக் கொண்டு இன்று வலுவான ஒரு கருத்தியலாக தனக் கென ஒரு உலகினையும் வடிவமைத்துக் கொண்டுள்ள தனை நாம் காண்டுகொள்ள முடிகிறது.

Digital என்பது Digit என்ற ஆங்கில மொழிப்பதத் திலிருந்து வந்த ஒன்றாகும். Digit என்பதினை தகவல் தொழில் நூட்பவியலாளர்கள் 0-9 வரையான இலக்கங்களி னையே குறிக்கும் ஒரு தொழில்நுட்ப சொல்லாடலாக இன்று வடிவமைத்துக் கொண்டுள்ளனர். இந்த பாகுபாட்டு முறைமையே பின்னர் டீயiயெசழல உழசனடின் பயன்பாட்டுக் குரியதாய் மாற்றியமைக்கப்பட்டதனை தகவல் தொழில் நூட்ப எண்மைய வடிவமைப்பு அல்லது உருவாக்க வரலாறுகளிலி ருந்து கண்டுகொள்ள முடியும். னுபைவை என்பதினை டுழபெ அயnஇ யலெ ரெஅடிநசள கசழஅ 0 வழ 9 என்றும் ய கiபெநச ழச வழந என்றும் குறிப்பிடுகிறது. றுமைநினையை தகவலை சேமிக்க, முறைவழியாக்க, உள்ளீடு செய்ய, அலைபரப்ப, பரிமாற, வெளியீடு செய்ய, காண்பிக்க, மரபான அலைவடிவங் களையும் (காந்த ஒலி நாடா போன்றவை), குறியீடுகளையும் (எழுத்துக்கள், இலக்கங்கள்) பயன்படுத்தாது இரண்டடிமான எண்களை அடிப்படையாகக் கொண்ட வழிமுறைகளை பயன்படுத்துதலைக் குறிக்கும் எனக்கூறுவதினையும் நாம் அவதானிக்க முடியும். இந்த சொல்லிற்குள்ள கருத்து நிலையானது நவீன தொடர்பாடல் தொழில் நூட்பத்தின் ஆணிவேர் பற்றிய ஆய்வுக்கு நம்மை அழைத்துச் செல்வதினைக் கண்டுகொள்ளலாம். இதன் போது யுயெடழப ஓ னுபைவையட என்ற வித்தியாசமான தொழில் புரட்சி ஏற்பட்ட தினை கவனத்தில் கொள்ளல் வேண்டும். இதற்கு முன்னர் மரபான காந்த அலைவடிவிலிருந்த செய்தி, கருவிகளின் செயல் மற்றும் பொறிமுறைக் கடத்துகையினை குறியீட்டு முறைமைகளினூடான தகவல் பரிமாற்றமாக மாற்றியமைத்த வரலாற்றின் மிக முக்கிய பாத்திரத்தினை னுபைவைஇ னுபைவையட என்பவைகளின் செயற்பாட்டு ஒழுங்குகளே செய்தன என்பதில் எதிர்வாதங்களுக்கு இடமின்றிப் போய்விடுகின்றன.

மேலும் னுபைவை என்பதிலிருந்து பெறப்பட்ட னுபைவையட என்ற சொல்லானது தகவலினை மாறிக்கொண்டிருக்கும் இலத்திரனியல் குறியீ;டுகளின் தொகுதியினை ஒரு கணிப் பொறி சார்ந்து பரிமாற்றிக் கொள்ளல், இலக்க வடிவிலான ஒரு தொகுதி, ஒரு புள்ளியினை விட பெரிதான சில இலக்கங்களி லான குறியீட்டு வகைமை எனக் கொள்ள முடிகிறது. இது பற்றிய தேடலின் போது பின்வரும் விடயங்களினை பொருத்தம் கருதி சற்று விளங்கிக் கொள்ள முயலுதல் முக்கிய மாகும். குறியீட்டு வகைமைக்குள் உள்ளீர்க்கப்பட்ட தகவல்களை ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு அல்லது ‘1’ எனப்படும் நேர்முனையிலிருந்து (Pழளவைiஎந) ‘2’ எனப்படும் மறைமுனை (ழெn-pழளவைiஎந) நோக்கிய பரிமாற்றம் செய்தல், ஒழுங்கு படுத்தப்படாத தகவல்களை ஒழுங்கு படுத்தல் (Pசழஉநளளiபெ)இ சேமித்தல் மற்றும் அது தொடர்பான ஏனைய விடங்களிலும் ஈடுபடல் என இத்தளத்தின் செயற்தன்மைகள் விரிந்து கொண்டே செல்கின்றன. (நீண்டு செல்லும் இந்த விளக்கங்களானது தனிப் பிரதிகளினை வேண்டி நிற்பவை. அதன் காரணமாய் இந்தளவில் இதனது விளக்கங்களினை சுருக்கிக் கொள்வோம்).

இங்கு டிஜிடலும் இதனுடன் இணைந்த இதர தொழில் துறைகளின் புரட்சிகளும் மேற்கின் நலன்களினை அதிகம் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருக்கும் தன்மையானது டிஜிடல் சென்றடையா மக்களிடையே ஒருவகை எதிரி நிலையினை ஏற்படுத்திவிட்டிருக்கின்றது. அதாவது டிஜிடல் தொழில் நுட்பத்தின் மீதான எதிர் பார்வையாய் உருமாறும் இப்படியான போக்குகள் புதிய தொழில் நுட்பங்களின் பாவினையிலும் அதனைக் கொண்டு எய்தப்படும் சமூகவியல், மானிடவியல் உட்பட அனைத்து அடைவு மட்டங்களிலும் ஒரு வித அசட்டுத் தேக்கத்தினை தொடராகவே தன்னுடன் தக்கவைத்துக் கொண்டுள்ளது. வரலாற்றின் போக்குகளில் மரபுகள் எந்தளவு முக்கியமோ அதே அமைப்பில் நடைமுறை உலகின் செல்நெறிகளும் முக்கியப்படுகின்றன.

அதேபோல், டிஜிடல் துறையினை கையில் வைத்துக் கொண்டுள்ள பல நிறுவனங்களும் நாடுகளும் இந்த தொழில் நுட்ப வளர்ச்சியினை பரவலாக்குவதில் கையாண்டு வருகின்ற மெத்தனப் போக்கானது வரலாற்றில் காணப்பட்ட பல்வேறு பிரிப்புக் கோடுகளினையும் அதன் மூலம் உருப்பெற்ற தேச மற்றும் சமூக தளங்களினையும் நினைவுபடுத்துவதினை அவதானிக்க முடியும். இந்த பிரிப்பு நிலையினை மிக வேகமாக ஏற்படுத்தியதில் (அதுவும் நடப்பு தசாப்தத்தில்) இணையத்தின் பாத்திரம் முதன்மை பெறுகின்றது. ஐகெழசஅயவழைn வுநஉhழெடழபல என்றிருந்த இந்தத் துறையானது இணையத்தின் வேகமான ஆக்கிரமிப்பின் பின்னர் ஐகெழசஅயவழைn ஊழஅஅரniஉயவழைn வுநஉhழெடழபல என மாற்றமடைந்ததாகக் கொள்வர். ஆக, ஊழஅஅரniஉயவழைn என்ற ஒழுங்கானது உலகின் பிரிவினைக்கான வழிமுறைகளினை உருவாக்கி அதிகாரத்தின் மையத்தினை தனதாக்கிக் கொள்வதில் இதுவரை எவ்வகையான பங்களிப்பினை ஒவ்வொரு காலகட்டத்திலும் செய்து வந்ததோ அதே வரலாற்றுப் பாத்திரத்தினை இந்த நூற்றாண்டின் மீதும் செய்து வெற்றி கண்டுகொண்டே இருகின்றது. இங்குதான் இரத்தமோ சத்தங்களோ இன்றி நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற “னுபைவையட றுயச - டிஜிடல் யுத்தம்” மிக முக்கியமாய் மையப் பரிசீல னைக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று நினைக்கிறோம்.

வரலாற்றில் ஓரங்கட்டப்பட்ட, தீண்டத்தகாத, விளிம்பு நிலை க்குள்ளான, மற்றும் தலித்கள் என அடிமை சாசனத்தின் முகங்கள் பல்வேறு வகைப்பாடுகளின் ஊடாய் அடையாளப் படுத்தப்பட்டு வந்துள்ளது. இவ்வாறு வௌ;வேறு காலகட்டங் களிலும், வௌ;வேறு சமூகங்களிலும் இந்தப் பிரிப்புக்கள் இருந் தாலும் சமூகங்களிற்கிடையே மற்றும் ஒரே சமூகத்திற்குள் காணப்பட்ட உயர், தாழ் சமூக நிலைகளே இவற்றின் பின் னால் இருந்து வந்துள்ளன. இந்தவகை சமூக நிலைகளானது தோற்றம் பெறுவதற்கு பல்வேறு காரணிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் செயற்பட்டுள்ளதி னை காண்கிறோம்.

அடிமை, குல பேதங்களினாலும் பெண்களிற்கு எதிரான வன்முறைகளினாலும் புரையோடிப்போயிருந்த அறாபிய வரலாற்றில் முஹம்மது நபிகளார் மிக முக்கிய பாத்திரத்தினை ஏற்படுத்தியவர். சமூக நீதிக்காகவும் சமத்துவ மனித வாழ்க் கைக்காகவும் பெண்கள் சம அந்தஸ்த்தை அனைத்துத் தளத் தினிலும் பெற்றுக் கொள்வதற்காக மிகப் பெரிய பேராட்டங்களி னையும் அதனுடனிணைந்த ஒரு சமூக ஒழுங்கினையும் நபிகளார் உருவாக்கினார். பொருளாதாரத்தினை மையப் படுத்திய சமூக முரண்பாடானது கால்மாக்ஸ், ஏங்கல்ஸ் காலத்தில் தத்துவார்த்த ரீதியில் விளக்கமளிக்கப்பட்டு அக்கொடு மைக்கு எதிரான புதிய ஒழுங்குகள் விஞ்ஞான முறைமை களினூடாக முன்வைக்கப்பட்டன. மரபில் ஆதிக்கம் செலுத்தி மத வைராக்கியத்தின் துணையுடன் சாதிக் கொடுமையினை கடவுளின் பெயரால் நிகழ்த்திக் கொண்டிருந்த ஆதிக்கப் பிரிவினை உடைத்து பெரியார் தன் அரசியலை மக்களிற்கு வழங்கினார். இந்துத்துவத்தின் வெறியிலிருந்தும் அதன் முரண்பட்ட சமூக நீதியிலிருந்தும் அம்பேத்கர் வெளியேறி தன் சமூகத்துடன் சம நீதியினை பேசிய பௌத்தத்தை தழுவினார். இவ்வாறு நீண்டு செல்லும் அநீதிக்கும் தீண்டாமைக்கும் எதிரான போராட்டம் என்பது ஒன்றும் புதிதல்ல. காலத்தின் போக்கினில் இந்த எதிர்ப்பியக்கங்கள் மக்களினை சுரண்டிக் கொண்டிருக்கும் அனைத்துக்கும் எதிராக கைகோர்துள்ள தினை நாம் கண்டுகொள்ளலாம்.

வர்க்க முரண்பாடானது சமூகத்தில் ஏற்படுத்திய பாதிப் பினை இனங்கண்டு கொண்டமையும் அது வரலாற்றில் இடம் பிடித்துக் கொண்ட மிக மோசமான அந்தஸ்துமே மாக்ஸிஸத் தின் தோற்றுவாய்க்கான காரணி. இன்று இனங்களிற்கு இடையிலான முரண்பாட்டுக்கும் நாடுகளிற்கு இடையிலான அனைத்து வகை போராட்டங்களிற்கும் டிஜிடல் தொழில் விளையாட்டுக்களே பிரதான காரணியாக இருக்கின்றது. நாம் மேலே பார்த்தது போல் இத்தொழில் துறையில் முன்னேற்றம் அடைந்து கொண்டவன் அல்லது அதனை தன் கைக்குள் இன்னும் அடைத்து வைத்துக் கொண்ட நிறுவனங்களே மிகப் பெரிய சுரண்டல் பிரிவினராக இருக்கின்றனர். நமது வளங் களில் மிகக் கூடியவை பல்வேறு டிஜிடல் தொழில்துறைகளின் ஊடாக இந்த ஆதிக்க நாடுகளிற்கும் நிறுவனங்களிற்கும் மிக அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நம்மைச் சுரண்டி தன் இலாபங்களை நிலை நிறுத்திக் கொள்ளும் இந்தப் பிரிவினர் தங்களின் இருப்பினை மாத்திரமே ஸ்திரப்படுத்திக் கொள்வதில் குறியாய் இருப்பதுடன் ஒரு நுகர்வாளனுக்குரிய உரிமை களினைக் கூட தர மறுப்பதினை நாம் மிக வெளிப்படையாக இன்றும் அனுபவிக்கிறோம். என்னதான் அளிப்புரிமை நியதி களின் அவசியத்தினைப் பற்றி இந்நிறுவனங்கள் வாய்நிறைய கூறிக்கொண்டாலும் தம் நலன்களினை விட்டுக் கொடுக்க தயாரில்லாததை நாம் நன்கறிவோம்.

தங்களிடம் இருக்கின்ற இந்த காலப்பகுதிக்கு உரிய மிகப் பெரிய வணிக, அரசியல் கட்டமைப்பான டிஜிடல் தொழில்துறை யினாலும் இதன் உலகளாவிய வெற்றியினா லும் நிலை நிறுத்தப்பட்டுள்ள அதிகாரமானது விளிம்பு நிலை மக்களாக இனங்காணப்பட்டிருக்கும் மூன்றாம் மண்டல மக்களை உலக இயங்கியலிலிருந்து பின்தள்ளி விட்டிருப் பதினை உணர்ந்து கொள்ள முடியும். இங்கு மூன்றாம் மண்டல மக்களிலும் அதிகாரத்தினதும் வர்க்கத்தின் உயர் நிலைகளாக தங்களி னை அடையாளப்படுத்தும் ஆதிக்கப் பிரிவுகளும் இந்தத் துறை யினை பணம் சம்பாதிக்கும் துறையாகக் கருதி மக்கள் சுரண் டலில் ஈடுபடுவதையும் மனங்கொள்ளல் முக்கியம்.

தங்களிடம் இருக்கும் பாதுகாப்பான அறிவியல் துறையினால் தங்களினை காப்பாற்றிக் கொள்ளும் இந்த சுரண்டல்காரர்கள் தாங்கள் சார் விடயங்களினை மாத்திரம் உலக நியதியாக காட்டிக் கொண்டிருப்பதுதான் மிகப் பெரிய அபத்தத்தின் வடிவமாகும். அதாவது யாரிடம் இந்த நூற் றாண்டின் அதிகாரக் குவியமான இத்துறைசார் பலம் இருக்கிறதோ அவர்களே மேற்சொன்ன நியதி வகுப்பாளர் களாக செயற்படுகின்றனர். மேலும் தேசங்களிற்கிடையி லான எல்லைகள் புறந்தள்ளப்பட்டு அரசியல் அமைப்பாக்கத்திற்கு வெளியே மக்களினை இணையச்செய்து கொண்டிருக்கும் இந்த அரசியல் முறைமையானது இவ்வதிகாரம் உள்ளவர் களினை மாத்திரம்தான் அடையாளப்படுத்துவ தினை கவனித்தல் வேண்டும்.

ஒரு புறம் இவ்வடையாள முகங்களின் உள்ளே நமக்கான செயல் ஒழுங்குகளிற்கு இடமில்லை என்ற கருதுகோளானது இத்துறைக்கு எதிர்ப்புள்ளியில் நமது சமூக கதையாடல்கள் இடம்பெற காரணமாகிவிட்டது. இதற்கு பிரதான காரணம் மேற்கை எதிர்ப்பதே நமது கலாசாரத்தின் உறுதியான நிலை யென்ற தொய்வுப் பண்பாகும். அதாவாது டிஜிடல் தொழில் நுட்பத்தின் சிறிய உபகரணங்களை மேலோட்டமாகப் பயன் படுத்திக் கொண்டு ஒரு பிரதான (சில வேளைகளில் கழிவு களின்) நுகர்வாளர்களாகவே தொடர்ந்து இருந்து கொண்டிருப் பதினை இது குறிப்பிடுகிறது. இதற்கு மாறாக டிஜிடலினால் நமக் கான சமூக கதையாடல்களினை மேற்கொள்வதினை நாம் தவிர்த்துக்கொண்டும் அல்லது நம்மால் அறியப்படாமலும் விடுபட்டுக் கொண்டே வருகின்றது.

இங்கு டிஜிடல் துறையினை தூரமாக்கி விடுவதினையும் பார்க்க நம்மை நாமே அறியாமல் அழிவுக்குள் தள்ளப்பட்டும் நமது அடையாள அழிப்பினை மேற்கொள்ளும் இத்துறையின் ஊடாக நமது அடையாள காப்பினை மேற்கொள்வதினை எடுத் துக் கூறுகிறோம். டிஜிடல் யுத்தத்தில் விரும்பியோ விரும் பாமலே உள்ளீர்க்கப்பட்டுள்ள நாம் இதற்குள் போராடிதான் ஆகவேண்டும். இந்த யுத்த களத்திலிருந்து வெளியேறி ஒரு போதும் வாழ முடியாத சூழல் உள்ளது மிக வெளிப்படை யாகும். அனைத்துத் துறைகளும் இத்துறையின் புரட்சிக் குள்ளே சிக்கி விட்டதினை நாம் நன்கறிவோம்.

ஆக மிகப்பெரிய ஆயுதமாக இன்று நம்முன் தோற்றம் பெற்றுள்ள டிஜிடலினை (மாயை) என்றும் கூறிப்பிடலாம். சிறு பான்மை சமூகங்களின் விழிம்பு நிலைப்படுத்தலுக்கு எதிரான போராட்ட வழிமுறைக்கு சாதகமாகப் பயன்படுத்தும் முறைமை களினை ஆய்வு செய்தல் முக்கியம் பெறுகிறது. நாம் ஏற்க னவே பார்த்த சமூக காப்புற்கான அனைத்து போராட்டங்களும் தமக்கு முன்னிருந்த எதிரிகளை முற்றாக எதிர்த்தே தம்மை காத்துக் கொண்டதுடன் அடையாளங்களாகவும் மாறின. ஆனால் நமக்கு முன்னுள்ள இந்த எதிரியினைப் பயன் படுத்தி இந்த யுத்தத்தில் நம்மை காத்துக் கொள்ளும் வழிறைகள் உள்ளது தான் மிகுந்த சுவாரசியயமாகும். ஆனால் நாம் இந்த போராட்டத்தில் எங்கு இருக்கிறோம் என்ற கேள்வி இன்னும் தொக்கு நிற்கிறது.

No comments: